\
நீட் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு
Published on

நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகுகின்றன.

மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுகின்றன. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியாக உள்ளன. சரியாக 2 மணியளவில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com