“திரிசூலம் போல் ‘நீட்’ தேர்விலும் மூன்று முனைகள் இருக்கிறது” : வெங்கடேசன் எம்பி

“திரிசூலம் போல் ‘நீட்’ தேர்விலும் மூன்று முனைகள் இருக்கிறது” : வெங்கடேசன் எம்பி
“திரிசூலம் போல் ‘நீட்’ தேர்விலும் மூன்று முனைகள் இருக்கிறது” : வெங்கடேசன் எம்பி

நீட் என்பது திரிசூலத்தின் மூன்று முனைகளை போல பாதிப்பை ஏற்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று மக்களவையில் பேசிய அவர் "நீட் என்னும் திரிசூலத்தில் மூன்று கூர் முனைகள் இருக்கின்றன. ஒரு முனை மாநில அரசின் கல்வி முறையை, மாநில உரிமையை குத்திக் கிழிக்கிறது. 

மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. திரிசூலத்தின் மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறது. நீதியும் தேர்வும் மனு நீதியின் சாயலாக, சாபமாக மாறிவிடக் கூடாது என்பதால் நீட்டை கைவிடுங்கள்" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com