ஆக. 1இல் நாடு முழுவதும் நீட் தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

ஆக. 1இல் நாடு முழுவதும் நீட் தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
ஆக. 1இல் நாடு முழுவதும் நீட் தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 11 மொழிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நாடுமுழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. பொதுவாக மே மாதம் நடைபெறும் இந்த தேர்வானது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆக்ஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வமான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com