நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

மருத்துவ படிப்பிற்கான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

நாடு முழுவதும் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் ஃபானி புயல் பாதிப்பு காரணமாக நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு பின்னர் கடந்த 20ஆம் தேதி நடத்தப்பட்டது. 

அத்தேர்விற்கு பிளஸ்டு படித்து முடித்த சுமார் 15,19,375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 14,10,754 பேர் மட்டுமே நீட் தேர்வினை எழுதினர். அதனை தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளது. 

நாளை www.nta.ac.in அல்லது https://ntaneet.nic.in/ - என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகள் வெளியாகும். ஒடிஷா மாநிலத்திற்கு மட்டும் தாமதமாக நடைபெற்றதால், நாளையே தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்புடன் தேர்வர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com