நீட் தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? - இதோ தேர்வுக்கான 20 முக்கிய வழிகாட்டுதல்கள்!

நீட் தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? - இதோ தேர்வுக்கான 20 முக்கிய வழிகாட்டுதல்கள்!

நீட் தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? - இதோ தேர்வுக்கான 20 முக்கிய வழிகாட்டுதல்கள்!

நாளை நீட் தேர்வு  நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

  • ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சமீபத்தில் எடுத்த புகைப்படத்தின் கலர் நகல் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்
  • ஹால் டிக்கெட்டின் 2-ம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும், முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்
  • 2-ம் பக்கத்தை ஒட்டப்பட்ட புகைப்படத்துடன் கொண்டு வர வேண்டும்
  • இல்லையென்றால் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்
  • மாணவர்களின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் பக்கம் இரண்டில் புகைப்படத்தின் மீது இடதுபக்கம் இருக்க வேண்டும்
  • பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்]
  • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாணவரும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து சேர வேண்டும்
  • பிற்பகல் 1.30 மணிக்கு மேல் தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும். மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
  • தேர்வு மையத்தை ஒரு நாள் முன்பே சென்று பார்த்து விடுவது நல்லது
  • பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என்று ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்
  • செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • தேர்வு எழுதி முடித்த பின், OMR தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே வெளியே கொண்டுவர வேண்டும்
  • தேர்வறை கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது
  • தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என்று இரண்டு முறை ,Attendance படிவத்தில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும்
  • இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் சமர்ப்பிக்கவில்லை என்று கருதப்படும்
  • மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்
  • மாணவர்கள், வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள், ஹால் டிக்கெட்டை வைத்திருக்கலாம்
  • எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வரக்கூடாது
  • தேர்வு மையத்தில் வழங்கப்படும் N95 முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்
  • தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com