16 ஆண்டுகளுக்கு பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த கர்நாடகா

16 ஆண்டுகளுக்கு பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த கர்நாடகா

16 ஆண்டுகளுக்கு பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த கர்நாடகா
Published on

சிவில் சர்வீஸ் தேர்வில் கர்நாடாகவைச் சேர்ந்த கே.ஆர். நந்தினி முதலிடம் பிடித்தார். 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்தாண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டது. இதில், 1099 மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி, சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தார். இந்திய வருவாய் துறையில் தற்போது பணியாற்றி நந்தினி பணியாற்றி வருகிறார். பொறியியல் பட்டதாரியான நந்தினி, கர்நாடக மாநில பொதுப்பணித் துறையில் பொறியாளராகவும் பணியாற்றி உள்ளார். யுபிஎஸ்இ தேர்வில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், விஜயலஷ்மி பிதாரி முதலிடம் பிடித்தார். அதன்பின்னர், முதல்முறையாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் யுபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டாவது இடத்தினை அன்மோல்ஷெர்சிங் பேடியும், கோபாலகிருஷ்ண ரோனங்கி 3ஆவது இடமும் பிடித்தனர். தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள பிரதாப் முருகன், தேசிய அளவில் 21ஆவது இடம் பிடித்து சாதித்துள்ளார்.  பிரதாப் முருகன், தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com