நபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா?  

நபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா?  

நபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா?  
Published on

நபார்டு (NABARD) வங்கி எனப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில், குரூப் - 'B' பிரிவில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து மட்டும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் - 82 
2. டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (இந்தி) - 09

மொத்த காலியிடங்கள் = 91  

முக்கிய தேதிகள்:

அறிவிப்பாணை வெளியான தேதி: 09.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 14.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2019

வயது வரம்பு: (01.09.2019 அன்றுக்குள்) குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
1. டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் என்ற பணிக்கு, இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 
2. டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (இந்தி) என்ற பணிக்கு, இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அத்துடன் கட்டாய / விருப்ப / பிரதான பாடமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பயின்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com