\
நீட் தேர்வில் தமிழக மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி

நீட் தேர்வில் தமிழக மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி

நீட் தேர்வில் தமிழக மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி
Published on

நீட் தேர்வில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில பாடத்திட்டத்தில் பயின்று அதிலேயே நீட் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 88,993 பேர். இவர்களில் 42,202 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பலருக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி பட்டியலில், முதல் 10,000 இடங்களில் 175 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,08,318 பேரில் மொத்தம் 58,922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 42,202 பேர் தமிழ் வழி தேர்ச்சி எழுதியவர்கள் என்பதால், நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com