தேர்வு பயத்தை போக்க புதிய அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் வரும் திங்கள் கிழமை புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட போது பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு விபத்து காப்பீடு ஏற்படுத்தி தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தவும் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் வரும் திங்கள் கிழமை அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது அவர் என்றார். பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் உத்தரவுகளையும் வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.