தமிழகத்தில் இருமொழிகல்வி கொள்கையே தொடரும்: மத்திய அரசுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்

தமிழகத்தில் இருமொழிகல்வி கொள்கையே தொடரும்: மத்திய அரசுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்

தமிழகத்தில் இருமொழிகல்வி கொள்கையே தொடரும்: மத்திய அரசுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்
Published on

தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே தொடரும் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கையை அறிவித்தது. அதில் இடம்பெற்றுள்ள மும்மொழி கல்வி கொள்கையை எதிர்த்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே தொடரும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் புதிய கல்வி கொள்கையில் உள்ள தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பின்னடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com