“பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி சிஇஓ-விடம் விளக்கம் கேட்டுள்ளோம்”- அமைச்சர் தகவல்

“பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி சிஇஓ-விடம் விளக்கம் கேட்டுள்ளோம்”- அமைச்சர் தகவல்
“பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி சிஇஓ-விடம் விளக்கம் கேட்டுள்ளோம்”- அமைச்சர் தகவல்

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

`போதை இல்லா பாதை’ எனும் அமைப்பின் மூலம் போதை ஒழிப்புக்காக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் வரும் அக்டோபர் 2ம் தேதி சென்னையிலிருந்து துவங்கப்படவுள்ளது. இந்த பிரச்சார பயணம் தொடர்பான போஸ்டரை சென்னை சேப்பாக்கத்தில உள்ள பிரஸ் கிளப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பை மாணவர்கள் உணர்வதில்லை. இதுபோன்ற போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவர்களை நேரில் சென்று அணுக வேண்டும். மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுபவர், அதை அவமானமாக கருதக்கூடாது” என அமைச்சர் அறிவுரை வழங்கினார்

பின்னர் பேசுகையில், “சிற்பி என்ற மாணவர் அமைப்பு மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஜுலை மாதம் முதல், வாரத்தில் 5 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் மருத்துவம், சமூக நலம், காவல்துறை சார்பாக விழிப்புணர்வு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வியில், கற்றல் என்பது மாணவ மாணவியருக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

பள்ளிகளில் பிரச்சனை இருந்தால் மாணவர்கள் 1447 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். குறிப்பிட்ட நாளன்று 12 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்றும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டுமன்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் சாதி குறித்து பேசிய விவகாரம் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com