``1 - 5 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்... ஆனால்”- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

``1 - 5 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்... ஆனால்”- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
``1 - 5 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்... ஆனால்”- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது எனத் தகவல் வெளியான நிலையில்,  “ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு உண்டு” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம், `ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதித் தேர்வு இல்லை’ என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், `6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். ஒன்பதாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

போலவே, நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13 ஆம் தேதி என்றும், 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும். அதேநேரத்தில் 11 ஆம் வகுப்பு மட்டும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்’ என கூறப்பட்டது.

இந்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது 1-5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். “ 1-5 ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் குறைந்த பாடத்திட்டத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும்” என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com