நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப் பேரவையில் பேசிய அவர், மருத்துவக் கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீடு போக 100% இல் 85 % இடம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 15% இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ’மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதற்காக 22-ஆம் தேதி தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டதாகவும்’ அமைச்சர் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 27-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com