விரைவில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு - கல்வி இயக்குநர்
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடுகோரி செப்டம்பர் 15ஆம் தேதி சட்ட மசோதாவாக
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட மசோதா
அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதிலும், ஒப்புதலுக்கு அனுப்பி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையிலும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழகமே காத்திருந்த நிலையில், அரசியலமைப்பு சட்டம் 162ஐ பயன்படுத்தி மருத்துவ படிப்பில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில்
மருத்துவ கலந்தாய்வு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்த பிறகே மருத்துவ கலந்தாய்வு என கூறிய தமிழக அரசின் முடிவில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.