மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தால் அனைத்தும் தாமதம்

மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தால் அனைத்தும் தாமதம்
மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தால் அனைத்தும் தாமதம்

மருத்துவக் கலந்தாய்வில் ஏற்பட்டு வரும் தாமதம், மற்ற அனைத்து தொழில்சார் படிப்புகளின் க‌லந்தாய்வுகளையும் பாதித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 20 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கிவிடும். நீட் தேர்வு முடிவுகளின் தாமதம் காரணமாக ஜூலை 17 ஆம் தேதி நடக்க இருந்தது. தமிழக அரசு அறிவித்த மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஒத்திவைக்கப்படு‌ம் சூழல் உருவாகியுள்ளது. ‌மருத்துவக் கலந்தாய்வு தாமதத்தால் ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்ட ஜூலை 17 ஆம் தேதியின் அடிப்படையில் புதிய தேதிகள் அறிவிக்கப்பட இருந்த சூழலில் நீதிமன்ற உத்தரவால் மேலும் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாண் படிப்புகளுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நிறைவுபெற்றிருந்தாலும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 12 ஆம் தேதி நடக்க இருந்தது. மருத்துவக் கலந்தாய்விற்கு பிறகுதான் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது. ஜூலை 19 ஆம் தேதி கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்க‌ழகம் அறிவித்திருந்தாலும், மருத்துவக் கலந்தாய்வை பொறுத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, கால்நடை மருத்துவக் கலந்தாய்வும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கலாமா? என ஆலோசிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய்வு தாமதம் அதனையும் பாதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com