எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு  

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு  
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு  

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியனது. நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 7ம் தேதி தொடங்கி ஜூன் 20 வரை நடைபெற்றது. நீட் தேர்வு தகுதியின்படி அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பத்தனர். 

அதன்படி ஜூலை2ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 4ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறப்பட்டது. ஆனால்  மொத்தமாக 68ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பரிசீலனைக்கு ஒருவார காலம் நீடித்தது. இதனால் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி தள்ளிபோனது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 6ஆம் தேதியான இன்று வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 8ஆம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 9ஆம் தேதியும் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com