ம‌ருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

ம‌ருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

ம‌ருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு
Published on

புதுச்சேரியில் சென்டாக் அமைப்பு மூலம் இன்று தொடங்கவிருந்த மருத்து‌வக் கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள சென்டாக் நிர்வாகம், அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லுரிகளில் உள்ள 150 இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அளிக்கும் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.

புதுவையில் மருத்துவ, பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை சென்டாக் அமைப்பு நடத்தி வருகிறது. அதேபோல் எம்பிபிஎஸ் பாடப்பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்தது. இதற்கான அட்டவணையையும் இணையதளத்தில் வெளியிட்டது. இதற்கிடையே நேற்று இரவு சென்டாக் நிர்வாகம் திடீரென கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு, சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி இந்த கலந்தாய்வு மேலும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும் என தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 இடங்களில் 22 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், 23 இடங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கும் ஒதுக்கப்படுவது வழக்கம். மீதமுள்ள 105 இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அளிக்கும் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தி இடம் ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com