ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

பிப்ரவரி 28-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிய அறிவிப்பு வெளியிடக் கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டது. அதில், எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதிப்படி, SC/ST வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று, கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியில் பட்டத்தை பெற்றவர்களே ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இயலும். இதனால் எஸ்/ எஸ்டி வகுப்பைச் சேர்ந்த பலர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத இயலாத நிலை உருவாகியுள்ளது.

ஆகவே பிப்ரவரி 28-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, எஸ்சி/எஸ்டி வகுப்பினர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியில் பட்டத்தை பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதலாம் என புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர். சுவாமிநாதன், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com