``6 கிமீ தூரத்தில் வசிக்கும் மாணவர்களையும் RTE-ன் கீழ் பள்ளியில் சேர்க்கவும்”- நீதிமன்றம்

``6 கிமீ தூரத்தில் வசிக்கும் மாணவர்களையும் RTE-ன் கீழ் பள்ளியில் சேர்க்கவும்”- நீதிமன்றம்

``6 கிமீ தூரத்தில் வசிக்கும் மாணவர்களையும் RTE-ன் கீழ் பள்ளியில் சேர்க்கவும்”- நீதிமன்றம்
Published on

“கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் வசித்தாலும், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும் சரவணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “எங்களது குழந்தைகளுக்கு மதுரை மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் RTE அடிப்படையில் பள்ளியில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுக்கு மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் மனுதாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே வசிக்கவில்லை என்ற காரணத்தை கூறி பள்ளி நிர்வாகம் மனுவை நிராகரித்துள்ளது. ஆனால் மகாத்மா மெட்ரிக் பள்ளி சிறுபான்மையினர் பள்ளியும் கிடையாது. எனவே அப்பள்ளியினர் இச்சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தில் உச்சநீதிமன்றம் சில தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியின் ஒரு கிலோ மீட்டருக்குள் விண்ணப்பம் வரவில்லை என்றால் மூன்று கிலோமீட்டர் தூரம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். மூன்று கிலோ மீட்டருக்குள்ளும் மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

நீதிமன்றம் வகுத்துள்ள இந்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இதனை கருத்தில் கொண்டு மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com