சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம் 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம் 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator)
2. தட்டச்சர் (Typist)
3. உதவியாளர் (Assistant) 
4. வாசிப்பாளர் / ஆய்வாளர் (Reader / Examiner)
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் (Xerox Operator)

காலியிடங்கள்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 76
2. தட்டச்சர் - 229
3. உதவியாளர் - 119
4. வாசிப்பாளர் / ஆய்வாளர் - 142
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 7

மொத்தம் = 573 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 01.07.2019 (இன்று முதல்)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2019 வரை
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.08.2019 வரை

தேர்வுக்கட்டணம்:
1. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ. 300
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

மாத ஊதியம்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
2. தட்டச்சர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
3. உதவியாளர் - ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை
4. வாசிப்பாளர் / ஆய்வாளர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1. பொது பிரிவினர் - 18 வயது முதல் 30 வயது வரை 
2. எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் - 18 வயது முதல் 35 வயது வரை
3. ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவோர் - 18 வயது முதல் 45 வயது வரை

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை (டிகிரி) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

குறிப்பு:
1. வாசிப்பாளர் / ஆய்வாளர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் போன்ற பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு கணினி சான்றிதழ் படிப்பு அவசியம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://www.mhc.tn.gov.in/recruitment/login - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:
1. எழுத்துத் தேர்வு
2. தனித்திறன் தேர்வு (Skill Test)
3. வாய்மொழித் தேர்வு (Oral Test)

பணியமர்த்தப்படும் இடங்கள்:
தேர்வு செய்யப்படுவோர், சென்னை உயர்நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலோ அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலோ பணியமர்த்தப்படுவர்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.mhc.tn.gov.in/recruitment/docs/126_2019.pdf மற்றும் https://www.mhc.tn.gov.in/recruitment/docs/127_2019.pdf- போன்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com