நீரிழிவு, ஊட்டச்சத்து துறைகளுக்கான எம்.டி. படிப்பிற்கு அனுமதி கோரி மா.சுப்பிரமணியன் கடிதம்

நீரிழிவு, ஊட்டச்சத்து துறைகளுக்கான எம்.டி. படிப்பிற்கு அனுமதி கோரி மா.சுப்பிரமணியன் கடிதம்
நீரிழிவு, ஊட்டச்சத்து துறைகளுக்கான எம்.டி. படிப்பிற்கு அனுமதி கோரி மா.சுப்பிரமணியன் கடிதம்

தமிழகத்தில் நீரிழிவு, ஊட்டச்சத்து துறைகளுக்கான எம். டி. படிப்பிற்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டாவியாவிற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். 

நீரிழிவு நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீரிழிவு நோயை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக தமிழகத்தில் 10.4% பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிரக சுகாதாரத்துறை மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் நீரிழிவு நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்து வருகிறது. இந்நேரத்தில் நீரிழிவு, ஊட்டச்சத்துக்கான எம். டி. பட்டப்படிப்பை துவக்கவேண்டும். இதன்மூலம் சுகாதாரத்துறை கட்டமைப்பு மேலும் வலுபெறும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் நீரிழிவு சிகிச்சை பிரிவினை சிறப்பான முறையில் செயல்படுத்த உதவியாக இருக்கும்.

இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்க உதவும். 1986ஆம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரில் உள்ள நீரிழிவுநோய் துறையில் முழு நேர 2 வருட நீரிழிவு டிப்ளமோ படிப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் ஒரு புதிய எம்.டி (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை உருவாக்குவது, ஏற்கெனவே எம்சிஐயில் அங்கீகரிக்கப்பட்ட நீரிழிவு டிப்ளமோ படிப்பினை பட்டப்படிப்பாக மாற்ற உதவும்.

இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி இந்த சிறப்புப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணி இடங்களை உருவாக்க உதவுகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் பாட அட்டவணையில் M.D (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பட்டப் படிப்பினையும் சேர்க்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு மருத்துவத்தில் டிப்ளமோவை எம்.டி பட்டப்படிப்பு இடங்களாக மேம்படுத்தவும், தமிழகத்தில் உள்ள பிற மருத்துவ கல்லூரிகளில் இந்தப் படிப்பைத் தொடங்கவும் உதவுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டாவியாவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com