2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளிலும் M.Phil படிப்பு கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.