மக்களவை செக்ரடேரியேட்டில் (Lok Sabha Secretariat), மியூசியம் சேவையில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் வாய்ந்த இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள் & காலியிடங்கள்:
1. கியூரேட்டோரியல் உதவியாளர் (Curatorial Assistant) - 01 (UR)
2. பாதுகாப்பு உதவியாளர் (Conservation Assistant) - 01 (UR)
3. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) - 01 (UR)
மொத்தம் = 03 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 07.12.2019
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 13.01.2020
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.44,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,42,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
1. கியூரேட்டோரியல் உதவியாளர் என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை (B.A - History ) / முதுகலை பட்டப்படிப்பில் (M.A.,) - வரலாறு (History) அல்லது மியூசியாலஜி (Museology) என்ற ஏதேனும் ஒரு துறையை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் மியூசியத்தில் குறைந்தபட்சமாக 1 அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. பாதுகாப்பு உதவியாளர் என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் (B.Sc - Chemistry) என்ற துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் மியூசியத்தில் குறைந்தபட்சமாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. தொழில்நுட்ப உதவியாளர் என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் (B.Sc - Computer Science) என்ற துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் மியூசியத்தில் குறைந்தபட்சமாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://loksabha.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:
THE RECRUITMENT BRANCH,
LOK SABHA SECRETARIAT
ROOM NO. 521, PARLIAMENT HOUSE ANNEXE,
NEW DELHI-110001.
மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/FINAL%20-MuseumAdvt-Appd-bySG.pdfs - என்ற இணையதளமுகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.