\
சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Published on

அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தரவரிசைப் பட்டியலையும் தங்களின் கட் ஆஃப் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம். ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இப்போது தமிழகத்தில் புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து இப்போது தமிழகத்தில் 10 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1292 இடங்கள் உள்ளன. ஆனால் இதற்காக 9 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com