ஏப்.21 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை... ஸ்பெஷல் கிளாசும் கூடாது

ஏப்.21 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை... ஸ்பெஷல் கிளாசும் கூடாது
ஏப்.21 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை... ஸ்பெஷல் கிளாசும் கூடாது

தமிழகத்தில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிவடைந்து விட்டன. ஆனால் தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் வெப்பக் காற்று அதிகமாக வீசுவதால் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com