மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆன்லைனிலும் நடைபெற்று வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விண்ணப்ப நிலையை www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.