\
தொழிலாளர் மேலாண்மைப் பட்டப்படிப்பு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

தொழிலாளர் மேலாண்மைப் பட்டப்படிப்பு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

தொழிலாளர் மேலாண்மைப் பட்டப்படிப்பு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
Published on

தமிழகத்தில் தொழிலாளர் மேலாண்மைப் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர் சட்டங்கள், நிர்வாகவியல் சட்டங்கள் பற்றிய முதுநிலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

எம்ஏ தொழிலாளர் மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிவுற்ற நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வழியுறுத்தி கோரிக்கைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி அக்டோபர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ. 100. அஞ்சலில் விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர் விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக அஞ்சல் கட்டணம் 50 ரூபாயை அனுப்பவேண்டும்.

விவரங்களுக்கு: 044 28440102 / 2844 5778

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com