'கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம்' - பள்ளி பாடபுத்தகங்களில் மாற்றத்தைக் கொண்டுவரும் கர்நாடக அரசு

கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், மாநிலத்தின் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் ஞானபீட விருது பெற்றவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு, மாற்றத்தை கொண்டு வருகிறது
பாட புத்தகங்கள்
பாட புத்தகங்கள்கூகுள்

கர்நாடகாவில் மாநில அரசு, அங்கு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாடபுத்தகத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது.

கர்நாடகாவில் ஓய்வுபெற்ற பேராசிரியர் மஞ்சுநாத் ஜி ஹெக்டே தலைமையிலான ஒரு குழுவினர், கன்னட இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், மாநிலத்தின் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் ஞானபீட விருது பெற்றவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு மாணவர்களின் பாடபுத்தகங்களில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று அரசாங்கத்திடம் பரிந்துரைகளை வைத்து இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட கல்விதுறை 1 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பாடபுத்தகத்தில் சில திருத்தங்களை கொண்டுவர உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி , வருகின்ற 2024-25 ம் கல்வியாண்டில் 1 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள பாடபுத்தகத்தில் கன்னடம் முதல் மொழியாகவும், 9ம் மற்றும் 10 வகுப்பு பாடபுத்தகத்தில் கன்னடம் மூன்றாம் மொழியாகவும் மற்று 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்துவதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 114 பாடப்புத்தகங்களில் - 44 கன்னட மொழி புத்தகங்கள் மற்றும் 70 சமூக அறிவியல் புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஓய்வுபெற்ற பேராசிரியர் மஞ்சுநாத் ஜி ஹெக்டே தலைமையிலான குழுவில் இருக்கும் பல புகழ்பெற்ற ஆசிரியர்கள் பள்ளி பாடப்புத்தகங்களுக்குத் திருத்துவதில் பங்குகொண்டுள்ளனர்.

விவரங்களின் படி கிரீஷ் கர்னாட்டின் ‘அதிகார’, பி.லங்கேஷின் ‘முருக மாட்டு சுந்தரி’, தேவனுரு மகாதேவாவின் ‘எடேகே பித்த அக்ஷரா’, முட்னாகூடு சின்னசாமியின் ‘சமுத்திர சும்பனா’, சந்திரசேகர கம்பாராவின் ‘சீமி’, தேவி, அக்கராசத்சஹா பட்டாவின் 'நம்ம பாஷே', கே.வி.திருமலேஷ் மற்றும் வி.ஜி. பட் ஆகியோரின் குழந்தைகள் கவிதைகள் மற்றும் நாகேஷ் ஹெக்டேவின் கட்டுரைகளும் கன்னட மொழி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com