\
காரைக்காலில் திடீரென விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை... நல்வாய்ப்பாக தப்பித்த மாணவர்கள்!

காரைக்காலில் திடீரென விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை... நல்வாய்ப்பாக தப்பித்த மாணவர்கள்!

காரைக்காலில் திடீரென விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை... நல்வாய்ப்பாக தப்பித்த மாணவர்கள்!
Published on

காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையின் மேற்கூறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை அடுத்த திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளி தொடங்கியவுடன் சிறிது நேரத்தில் பள்ளி கட்டிடத்தில் தட்டச்சு பயிற்சி வகுப்பறை மற்றும் மற்றொரு வகுப்பறையின் மேற்கூறை இடிந்து விழுந்துள்ளது.

இதையடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் பெரும் அசம்பாவி தவிர்க்கப்பட்ட நிலையில், தட்டச்சு இயந்திரங்கள் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்த இடிந்து விழுந்த பகுதிகளை அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com