உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் Kalvi சர்வதேச பொதுப் பள்ளி

மதுரை- சோழவந்தான் கிராமத்தில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி 2024-ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்து குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது.
கல்வி சர்வதேச பொதுப் பள்ளி
கல்வி சர்வதேச பொதுப் பள்ளி புதிய தலைமுறை
Published on

மதுரை - சோழவந்தான் கிராமத்தில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி 2024-ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்து குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது.

யுனைடெட் கிங்டெம் (UK), அக்சென்ச்சர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் லெமன் அறக்கட்டளையுடன் இணைந்து T4 கல்வியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருதுகள் கல்விச் சிறப்பினை உச்சமாகக் கொண்டு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் விளையாட்டு மூலம், குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அர்ப்பணிப்புடன் தனித்து நிற்கிறது இப்பள்ளி. மற்றும் சமூக ஒத்துழைப்புக்காகவும் உலகின் சிறந்த பள்ளிப் பரிசுக்கான முதல் 10 தேர்வுப்பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியுடன் விளையாட்டுகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது கல்வி பள்ளி.

கல்வி சர்வதேச பொதுப் பள்ளி
மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா... சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

மேலும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை வழங்குகிறது. இந்த முயற்சியானது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 452 மாணவர்களை கல்வி முறையில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது. சிறார் குற்றங்களைக் குறைப்பதற்கும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை தொடர்ந்து வழங்குகிறது கல்வி பள்ளி. இங்கிருந்து பதினைந்து மாணவர்கள் தேசிய முதன்மை வெற்றியாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com