'OMR ஷீட்டின் கார்பன் காப்பி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை?' - நீட் வழக்கில் நீதிபதி கேள்வி!

'OMR ஷீட்டின் கார்பன் காப்பி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை?' - நீட் வழக்கில் நீதிபதி கேள்வி!
'OMR ஷீட்டின் கார்பன் காப்பி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை?' - நீட் வழக்கில் நீதிபதி கேள்வி!

நீட் தேர்வு விடைத்தாளில் (OMR) குளறுபடி நடந்துள்ளது என உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரி மாணவன் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையில், மாணவனின் OMR ஷீட் மற்றும் அதன் கார்பன் காப்பி தாக்கல் செய்ய நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று நீட் தேர்வு முகமை மாணவனின் ஓஎம்ஆர் ஷீட்டை மட்டுமே தாக்கல் செய்தது. OMR ஷீட்டின் கார்பன் காப்பி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை? மனுதாரரின் கோரிக்கையே இதில் முறைகேடு நடந்துள்ளது என்பது தான். எனவே, OMR ஷீட்டின் கார்பன் காப்பி வரும் வெள்ளி கிழமை அவசியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

திருநெல்வேலியைச் சார்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17லில் நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு நீட் தேர்வில் பங்கு பெற்றேன் தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன். இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை (answer key) வெளியிட்டது. அதில், எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதில் எழுதிய OMR விடைத்தாள் பக்கங்களை பதிவேற்றம் செய்துள்ளது. அதை பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சியானது.

அந்த OMR பதில் தாள் என்னுடையது அல்ல; அதில், எனக்கு 115 மதிப்பெண்கள் மட்டுமே வரும். அந்த OMR விடைத்தாள் நான் எழுதியது இல்லை. எனது விடைத்தாள் திருடப்பட்டு உள்ளது. இதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது. எனவே, எனது அசல் OMR விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் எனது விடைத்தாள் மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மருத்துவ கலந்தாய்வில் எனக்கான ஒரு இடம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்த வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீட் தேர்வு முகமை தரப்பில், மாணவன் எழுதிய நுழைவுத் தேர்வின் OMR சீட் நீதிபதி முன் தாக்கல் செய்தார். ஆனால், நீதிபதி பிறபித்த உத்தரவில் OMR ஷீட் மற்றும் அதன் கார்பன் காப்பியும் இணைத்து தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று OMR ஷீட்டின் கார்பன் காப்பி தாக்கல் செய்யப்படவில்லை.

இதனை பார்த்த நீதிபதி, OMR ஷீட்டின் கார்பன் காப்பி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை? என கேள்வி எழுப்பியதுடன், மனுதாரரின் கோரிக்கையே இதில் முறைகேடு நடந்துள்ளது என்பதுதான். எனவே OMR ஷீட்டின் கார்பன் காப்பி வரும் வெள்ளி கிழமை அவசியம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com