இஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்!

இஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்!

இஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்!
Published on

இஸ்ரோ, இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் மற்றும் இந்தோ திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்:

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அம்ப்; கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். இல்லையெனில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 30
வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2018
விவரங்களுக்கு: http://www.satp.serc.iisc.ac.in/advertisementN.jsp

இஸ்ரோவில் 24 சயிண்டிஸ்ட் வேலை:

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் கழகத்தில் சயிண்டிஸ்ட் பணிக்கான ஆட்கள் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். இதில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2018
விவரங்களுக்கு: http://www.shar.gov.in

இந்தோ திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படை: 

இந்தோ திபத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 134 கான்ஸ்டெபிள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்படுகின்றனர். இந்தப் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV/ HMV லைசன்ஸ் பெற்று இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.21700-69100/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.3.2018
விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_15_1718b.pdf

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com