கல்வி
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 1896 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை டெல்லி மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் என்ஜீனியர் உள்ளிட்ட பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்டுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் இன்று முதல் வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை https://cdn3.digialm.com/EForms/html/form54929/Instruction.html என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.