டிப்ளமோ படித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை

டிப்ளமோ படித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை
Published on

கொல்கத்தாவில் உள்ள இந்திய எஃகு தயாரிப்பு நிறுவனமான, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL)- இல் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:
ஓவர்மேன் (S-3) 
மைனிங் சர்தார், (S-1) 
சர்வேயர் (S-3) 

காலிப்பணியிடங்கள்:
ஓவர்மேன் (S-3) - 19
மைனிங் சர்தார், (S-1) - 52
சர்வேயர் (S-3) - 01
மொத்தம் = 72 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 14.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2019
ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 10.03.2019

வயது வரம்பு: (10.03.2019 அன்றுக்குள்)
18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டண விவரம்:
1. ஓவர்மேன், S-3 என்ற பணிக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: ரூ.250
2. மைனிங் சர்தார், S-1 என்ற பணிக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: ரூ.150
3. சர்வேயர், S-3 என்ற பணிக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: ரூ.250
எஸ்.சி / எஸ்.டி / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
சல்லான் மூலமும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமும் இத்தேர்விற்கான கட்டணத்தை செலுத்தலாம்.

கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம்:
1. ஓவர்மேன் (S-3) என்ற பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 3 வருட டிப்ளமோ இன் மைனிங் இன்ஜினியரிங் என்ற படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மைனிங் சர்தார், (S-1) என்ற பணிக்கு,பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய மைனிங் சர்தார் என்ற சான்றிதழ் படிப்பை பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சர்வேயர் (S-3) என்ற பணிக்கு,  பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 3 வருட டிப்ளமோ இன் மைனிங் & மைன்ஸ் சர்வே என்ற படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 
சைல் (SAIL) நிறுவனத்தின் இணையதளமான www.sail.co.in - என்ற இணையத்தில் சென்று, அதில் 'careers' - என்ற லிங்க்-இல் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
https://sailcareers.com/media/uploads/advt......pdf - என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com