சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் - 500 பணியிடங்கள்
சென்னையில் இன்று 500 காலி பணியிடங்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், சென்னையில் இன்ன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் மதியம் 2 மணிவரை மட்டுமே நடைபெறும்.
பத்துக்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 500 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். அதேசமயம் 35 வயதுக்குட்பவர்களாக இருக்க வேண்டும். இதேபோன்று அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மாவட்டத்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.