உலகளாவிய 1000 பல்கலைக்கழகங்கள்: தரவரிசை பட்டியலில் நுழைந்தது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

உலகளாவிய 1000 பல்கலைக்கழகங்கள்: தரவரிசை பட்டியலில் நுழைந்தது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
உலகளாவிய 1000 பல்கலைக்கழகங்கள்: தரவரிசை பட்டியலில் நுழைந்தது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் முறையாக கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 1,000 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்திய இளங்கலை பொறியியல் திட்டத்தினால், இப்பல்கலைக்கழக தரவரிசை மதிப்பீட்டிற்கு தகுதியுடையதாக மாறியுள்ளதுதரவரிசையில் 561-570 இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்கும் நிறுவனங்களை மட்டுமே மதிப்பிடுகிறது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த 21 கல்லூரிகள் இடம்பெற்ற சூழலில், இந்த ஆண்டு 22 இந்திய கல்லூரிகள் முதல் 1,000 பட்டியலில் உள்ளன. கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர் மற்றும் மெட்ராஸ் ஐஐடி இந்த தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜே.என்.யூ முதன்முறையாக 1000 உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் நுழைகிறது. இருப்பினும், இந்த தரவரிசை இந்தியாவின் கல்வித் தரத்தை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்று சில கல்வி நிறுவனங்கள் இன்னும் கவலைப்படுகின்றன. ஏனெனில் இத்தரவரிசை பெரும்பாலும் சர்வதேச கருத்து காரணிகளை சார்ந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

இந்த தரவரிசையில் ..டி பம்பாய் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் உலக தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி 177 வது இடத்தை பிடித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com