\
JEE Main 2027 Registration: Last Date, Fees, How to Apply
JEE Main 2027ANI

JEE Main 2027: முதல் அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

தேசிய தேர்வு முகமை (NTA), JEE Main 2027 முதல் அமர்வுக்கான விண்ணப்பப் படிவ இணைப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in-இல் செயல்படுத்தியுள்ளது. தேர்வர்கள் 2026 நவம்பர் 22 வரை விண்ணப்பிக்கலாம்.
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

JEE Main 2027 முதல் அமர்வுக்கான தேதிகளையும் தகுதி விவரங்களையும் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. முதல் அமர்வுக்கான விண்ணப்பப் படிவ இணைப்பை, அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in-இல் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள தேர்வர்கள், 2026 நவம்பர் 22 வரை விண்ணப்பிக்கலாம் இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முன் தகுதி விதிமுறைகளைப் படித்துப் பார்க்குமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

JEE Main 2027 Registration: Last Date, Fees, How to Apply
JEE Main 2027 Registration: Last Date, Fees, How to ApplyANI

JEE Main

JEE Main 2027 தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. முதல் அமர்வு 2027 ஜனவரியிலும், இரண்டாம் அமர்வு 2027 ஏப்ரலிலும் நடைபெறவுள்ளது. முதல் அமர்வுத் தேர்வு கணினி வழித் தேர்வு (CBT) முறையில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய பதின்மூன்று மொழிகளில் நடத்தப்படும். தேர்வு 2027 ஜனவரி 20, 21, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என NTA அறிவித்துள்ளது. JEE Main 2027 முதல் அமர்வுக்கான நகர அறிவிப்புச் சீட்டு(intimation slip) 2026 டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும். நுழைவுச் சீட்டு(admit car) 2027 ஜனவரி 13 அன்று வெளியிடப்படும்.

JEE Main 2027 Registration: Last Date, Fees, How to Apply
ரூ. 500 கோடி ஆடியோ விவகாரம்.. பாஜக - சிவசேனா இடையே புதிய மோதல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com