'10, +2 மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது!' - பள்ளிகளுக்கான அரசின் நெறிமுறைகள்

'10, +2 மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது!' - பள்ளிகளுக்கான அரசின் நெறிமுறைகள்

'10, +2 மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது!' - பள்ளிகளுக்கான அரசின் நெறிமுறைகள்
Published on

இம்மாதம் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: 

1. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

2. தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துபூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னர் தங்கள் பள்ளிகளை திறக்கலாம்.

3. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

4. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.

5. இணையவழி தொலைதூர கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும்.

6. பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தும்போது சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்.

7. பெற்றோரின் எழுத்துபூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.

8. பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கலாம்.

9. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்.

10. அத்தகைய மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்திற்கு தக்க முறையில் திட்டமிடவேண்டும்.

11. அனைத்து மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத் துறையால் வழங்கப்படும்.

12. பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்போது, அரசால் வெளியிடப்படும் இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயாமாக பின்பற்ற வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com