இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு!

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு!
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு!

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2020 ஆம் ஆண்டிற்கான ஜனவரி பருவத்தில் சேருவதற்கு ஜூன் மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 31.03.2019, மாலை 05.45 மணி
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 01, 2019 மற்றும் ஜூன் 02, 2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 04.10.2019

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.01.2020 அன்று 11 வயது 6 மாதங்கள் நிரம்பியவராகவும், 13 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.  

தேர்வுக்கட்டண விவரம்:
பொதுப் பிரிவினர் - ரூ.600
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் - ரூ.555
 
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

உத்ரகாண்ட், டேராடூன், டெல்பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு - 01576) என்ற முகவரிக்கு தேர்வுக்கட்டணத்தை கேட்புக் காசோலையாக (DD) அனுப்ப வேண்டும்.

கல்வித்தகுதி:
01.01.2020 -இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வுக்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கீழ்கண்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, அதனுடன் கேட்புக் காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பெற அனுப்ப வேண்டிய முகவரி: 

கமாண்டன்ட், 
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி,
டேராடூன்,
உத்ரகாண்ட் - 248003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:

தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை,
பூங்கா நகர்,       
சென்னை - 600003.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_11_RIMC_Jan_2020_term.pdf - என்ற இணையத்தில் பார்க்கலாம்.
மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை அதாவது http://www.rimc.gov.in/ -இல் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com