இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?

இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?

இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
Published on

பெங்களூருவில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனமான URSC-இல், டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் & காலியிடங்கள்: 
1. டெக்னீசியன் ‘B’ - 102
2. டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் - 41
உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்தம் = 182 காலிப்பணியிடங்கள்


முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 15.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2020
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 07.03.2020

வயது வரம்பு: (06.03.2020 அன்றுக்குள்),

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

தேர்வுக்கட்டணம்:

பொது, ஓபிசி பிரிவினர் (ஆண்கள்) - ரூ.250

பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

குறிப்பு:
ஆன்லைன், ஆஃப்லைன் வழியாகவும் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.

ஊதியம்: 
குறைந்தபட்சமாக, ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
பணிகளுக்கேற்ப ஊதியத்தில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். அதிகபட்சமாக டிப்ளமோ இன் இன்ஜினியரிங் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆட்டொ மொபைல், எலக்ட்ரிக்கல்) அல்லது அதற்கிணையான இளங்கலை பட்டப்படிப்பில் (B.Sc) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிகளுக்கேற்ப கல்வித் தகுதியில் மாற்றங்கள் உண்டு.


விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைனில், www.isro.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத்தேர்வு (Written Test)
2. திறன் தேர்வு (Skill Test)

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://apps.isac.gov.in/TA-2020/advt.jsp - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com