இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

உத்தரபிரதேசம் மதுராவில் உள்ள, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் என்ற பணிக்கு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கான 42 காலிப்பணியிட தேர்வுக்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த, இளமையான மற்றும் திறமிக்க, இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பளம்: மாதம் 11,900 முதல் 32,000 ரூபாய் வரை.

பணி: 
1. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (புரொடக்‌ஷன்) = 14 
2. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (பவர் & யுடிலிடி) = 02
3. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (எலக்ட்ரிக்கல்) = 08
4. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (மெக்கானிக்கல்) = 10
5. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) = 08

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.01.2019
ஆன்லைன் விண்ணப்பத்தை தகுந்த ஆதாரங்களுடன் சமர்பிக்க கடைசி நாள்: 04.02.2019 
எழுத்து தேர்வு நடைபெறும் தோராயமான தேதி: 10.02.2019
எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் தோராயமான தேதி: 22.02.2019
திறன் / திறமை / உடல் பரிசோதனை (SPPT) நடைபெறும் தோராயமான தேதி: 04.03.19 முதல் 07.03.19 வரை.
இறுதி முடிவுகள் வெளியாகும் தோராயமான தேதி: 11.03.2019

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவின் விண்ணப்பதாரர்கள் மட்டும் 150 ரூபாய் தேர்வுக் கட்டணமாக எஸ்பிஐ வங்கியில் செலுத்தவேண்டும். 

எஸ்.சி / எஸ்.டி / PWD / முன்னாள் ராணுவத்தினர் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை. செலுத்திய தேர்வுக்கட்டணத்தை செலுத்திய பிறகு மீண்டும் திரும்ப பெற முடியாது.

வயது:
பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் - 18 முதல் 26 வயது வரை

வயது தளர்வு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்கள் - 5 வருடங்கள்
ஓபிசி (NCL) பிரிவு விண்ணப்பதாரர்கள் - 3 வருடங்கள்

தேர்வு செய்யப்படும் முறைகள்:
இரண்டு கட்டமாக இந்த பணிக்கான தேர்வு முறைகள் நடைபெறும். 1. எழுத்து தேர்வு மற்றும் 2. திறன் / திறமை / உடல் பரிசோதனை (SPPT).

கல்வித் தகுதிகள்:
1. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (புரொடெக்‌ஷன்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், கெமிக்கல் / ரிஃபைணரி & பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று அல்லது பி.எஸ்சி பிரிவில் (Maths, Physics, Chemistry or Industrial chemistry),  குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 
 
2. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (பவர் & யுடிலிடி) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

3. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (எலக்ட்ரிக்கல்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

4. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (மெக்கானிக்கல்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

5. ஜுனியர் இன்ஜினியர் அசிஸ்டெண்ட் - IV (இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ பிரிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியரிங் துறையில் பயின்று, குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50% (45% - எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்) மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

முன் அனுபவம்: 
குறைந்தது ஒரு வருடமாவது, அந்தந்த துறை சார்ந்த பணிகளில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு: 
மேற்குறிப்பிட்ட இந்த பணிக்கு, B.E / M.Sc / MCA / MBA / CA / CS / ICWA / LLB - போன்ற  பட்டதாரிகள் விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

கடைசியாக ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான மற்றும் தகுந்த கல்வி சான்றிதல்களுடன் இணைத்து, GM(HR), HR Dept, Administration Building, Mathura Refinery, Mathura, Uttar Pradesh - 281 005 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான தகவல்களுக்கு, 
https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/56.pdf- என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com