வேதியியலில் பிஎச்.டி முடித்தவர்களுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை!
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், ஆராய்ச்சி அதிகாரி மற்றும் தலைமை ஆராய்ச்சி மேலாளர் போன்ற காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
ஆராய்ச்சி அதிகாரி (Research Officer - Grade 'A')
தலைமை ஆராய்ச்சி மேலாளர் (Chief Research Manager - Grade 'E')
ஒப்பந்த அடிப்படை காலம்: 3 - வருடங்கள்
காலிப்பணியிடங்கள்:
ஆராய்ச்சி அதிகாரி - 24
தலைமை ஆராய்ச்சி மேலாளர் - 01
மொத்தம் = 25 காலிப்பணியிடங்கள்
முக்கிய பணிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2019, மதியம் 03.00 மணி வரை
தேர்வுக்கட்டணம்:
1. பொது / OBC / EWS பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.300
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
குறிப்பு:
1. ஆன்லைன் மற்றும் வங்கிகளில் சென்று தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
2.செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்பெற இயலாது.
ஊதியம்:
1. ஆராய்ச்சி அதிகாரி என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.60,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. தலைமை ஆராய்ச்சி மேலாளர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.1,00,000 முதல் அதிகபட்சமாக ரூ.2,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: (31.03.2019 அன்றுக்குள்)
1. ஆராய்ச்சி அதிகாரி என்ற பணிக்கு, அதிகபட்சமாக 32 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
2. தலைமை ஆராய்ச்சி மேலாளர் என்ற பணிக்கு, அதிகபட்சமாக 45 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
1. ஆராய்ச்சி அதிகாரி என்ற பணிக்கு, முழு நேர படிப்பில் - பி.எச்டி (Ph.D) என்ற உயர்படிப்பை, வேதியியல் துறையில் பயின்று குறைந்தபட்சமாக 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வெண்டும்.
2. தலைமை ஆராய்ச்சி மேலாளர் என்ற பணிக்கு, முழு நேர படிப்பில் - பி.எச்டி (Ph.D) என்ற உயர்படிப்பை, பையோ - டெக்னாலஜி / மைக்ரோ பையாலஜி / மாலிகுளார் பையாலஜி - போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று குறைந்தபட்சமாக 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் அத்துறை சார்ந்து 15 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.ioclrnd.com/recr/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த தகவல்களைப் பெற, https://www.iocl.com/download/Final%20Advertisment%20Advertisement%2096.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.