உளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

உளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..? உங்களுக்கு ஒரு வாய்ப்பு
உளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1054 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் (www.mha.gov.in) or (www.ncs.gov.in)  என்ற இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான நாட்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்- அக்டோபர் 20, 2018
ஆன்லைன் விண்ணப்பம் நிறைவு- நவம்பர் 10, 2018
விண்ணப்ப கட்டணம் செலுத்துவற்கான கடைசி நாள்- நவம்பர் 10, 2018

விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 கட்டணம்.
எஸ்.சி/ எஸ்.டி, முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

வயது வரம்பு

பொதுப்பிரிவினர்- 27 வயது வரை
எஸ்சி/ எஸ்டி பிரிவினர்- 32 வயது வரை
ஒபிசி- 30 வயது

மேலும் விவரங்களுக்கு (www.mha.gov.in) or (www.ncs.gov.in) என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com