வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோரா நீங்க? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோரா நீங்க? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோரா நீங்க? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோர் என்ன வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் ? என்பதற்கான எளிமையான விளக்கங்களை இக்கட்டுரையில் காண்போம்.

வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்ல விரும்புவோர் அந்த நாடுகளில் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் இருக்கவும் அதற்காக உள்ள விதிமுறைகள் குறித்தும் கடைபிடிக்க வேண்டிய சுலபமான வழிமுறைகள் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளது.


“* வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடியான நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும்.

* புலம்பெயர்வு சட்டம் 1983 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனத்திற்கான பதிவு சான்றிதழை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

* வெளிநாட்டு நேரடி வேலைவாய்ப்பு அழைப்பு வருகிறது என்றால் அந்த நிறுவனத்தின் முகவரி தொடர்பு எண்கள், என்ன மாதிரியான வேலை எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரி பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் இமிகிரன்ஸ் ஆபீஸர் எனப்படும் புலம்பெயர்வு அதிகாரியிடம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

* www.meaindia.nic.in, www.india.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு ஆட்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை சரி பார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தகவல்களை உறுதி செய்யாமல் ஒருபோதும் பணம் பாஸ்போர்ட் சான்றிதழ்கள் உள்ளிட்ட எதையும் கட்டாயம் வழங்கக் கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* முகவருக்கான கட்டணமாக ஒன்றரை மாத ஊதியம் அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மேல் உரிய ரசீதுகள் இல்லாமல் கொடுக்க வேண்டாம்

* போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும் அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர டெல்லியில் உள்ள புலம்பெயர்வு அலுவலகத்திலும் புகார் அளிக்கவும் வழிவகை உள்ளது.

* விசா எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது அந்த நோக்கத்திற்காக மட்டுமே வெளிநாட்டில் பயன்படுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் சிறை தண்டனை வரை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் அது தொடர்பான காப்பீட்டினை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்து கொள்வது, பாஸ்போர்ட் மற்றும் வேலை வாய்ப்பு விசா குறைந்தபட்சம் காலாவதி ஆவதற்கு ஆறு மாதமாவது இருக்க வேண்டும்.

* வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதற்கான உரிய வங்கி கணக்கை வைத்திருப்பது போன்றவை எல்லாம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

* பாஸ்போர்ட்டை தொலையாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு ஒப்பந்தத்திலோ அல்லது வெற்று காகிதத்திலோ கையொப்பமிட்டு தரக்கூடாது, வெளிநாட்டில் நடைபெறும் போராட்டம் போன்றவற்றில் பங்கெடுக்கக்கூடாது.

* சம்பந்தப்பட்ட நாட்டில் இந்திய தூதரகம் எங்கே உள்ளது, அதன் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com