+2 முடித்தவரா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

+2 முடித்தவரா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்
+2 முடித்தவரா? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு பணிகளில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன.

இந்திய அளவில் 482 பயிற்சியாளர்கள் தி இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

1.  நவம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்.
2. விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி -நவம்பவர் 22

3. பணிக்காலம்:

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் - 1 வருடம்

டேட்டா என்ட்ரீ பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கான பணிக்காலம் 15 மாதங்கள் .

4. வயது தகுதி

(18 வயது - 24 வயது ( அக் - 30 லிருந்து வயது கணக்கிடப்படும்)

5. கல்வித்தகுதி

1. தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, பணி சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. ட்ரேடு பயிற்சியாளர் பதவிக்கு டிகிரிப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3. டேட்டா பதிவிடும் பணிக்கு 12 வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.

இந்தப் பணிகளுக்கான எழுத்துப்பூர்வத் தேர்வானது டிசம்பர் ஆறாம் தேதி நடைபெறுகிறது. தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். தவறாக பதிலளித்தால் மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை கிடையாது. எழுத்துத் தேர்வில் தேர்வாக குறைந்தது 40 மதிப்பெண்களை பெற வேண்டும். எஸ்.சி,எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் 35 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.

மேலும் விவரங்களுக்கு iocl.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com