பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை!
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை!

இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் பல்வேறு நாவல் கம்மாண்டில் குரூப் - ‘சி’ பிரிவில் டிரேட்ஸ்மேன் மேட் என்ற பணிக்கு, 554 காலிப்பணியிடங்களுக்கான இந்திய கடற்படை சிவிலியன் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும், உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 02.03.2019, காலை 10.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2019, மாலை 05.00 மணி
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 15.03.2019
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 11.04.2019

காலிப்பணியிடங்கள்:
Headquarters Eastern Naval Command, Visakhapatnam (HQENC) - 46
Headquarters Western Naval Command, Mumbai (HQWNC) - 502
Headquarters Southern Naval Command, Kochi (HQSNC) - 06
மொத்தம் = 554 காலிப்பணியிடங்கள்:

தேர்வுக்கட்டணம்:
பொதுப் பிரிவினர் மற்றும் ஆண்கள்: ரூ. 205
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD / பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை
 

சம்பளம்:
குறைந்தபட்சமாக ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
 
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கான வயது குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது ஐடிஐ சான்றிதழ் படிப்பை முடித்தவராகவோ இருத்தல் அவசியம். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் இந்திய கடற்படையின் இணையதளமுகவரியான, www.joinindiannavy.gov.in -> Join Navy -> Ways to Join -> Civilians -> Tradesman Mate - இல் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 

முக்கிய குறிப்பு:
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடங்கள் குறித்து, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுடைய தொலைபேசி எண்ணுக்கும், இ-மெயில் ஐடிக்கும் தகவல்கள் பின்னர் அனுப்பப்படும். 

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற 
http://incetrecruittmm.in/intmmfeb19/uploads/loadpdf.php?file=k7m5+fQk9G2ztjgx87Hm6KV2sm0cN7Yk6ed13A=&t=xa3HrKHRyM4=#toolbar=0&navpanes=0 - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com