இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்!

இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்!

இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்!
Published on

இந்திய கடலோர காவல்படையில், யந்த்ரிக் (YANTRIK - 02/2020 Batch) பணிக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :

யந்த்ரிக் - YANTRIK - 02/2020 Batch

காலியிடங்கள்:
1. யந்த்ரிக் டெக்னிக்கல் (மெக்கானிக்கல்) - 19
2. யந்த்ரிக் டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல்) - 03
3. யந்த்ரிக் டெக்னிக்கல் (எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்) - 15

மொத்தம் = 37 காலியிடங்கள்

முக்கிய தேதிகள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 16.03.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.03.2020
தேர்வு நடைபெறும் மாதம் : ஏப்ரல் - 2020.

கல்வித்தகுதி :
10-ஆம் வகுப்பு அல்லது அதற்கிணையான மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி அத்துடன் AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ இன் (எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்) இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு: விளையாட்டு வீரர்களுக்கு தனி சலுகை உண்டு.

வயது :

குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகப்பட்சமாக 22 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

01.08.1998 முதல் 31.07.2002 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.joinindiancoastguard.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:
தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மருத்துவ தகுதிகள் :

உயரம் : குறைந்தபட்சம் 157 செ.மீ
மார்பளவு : இயல்பு அளவுடன் 5 செ.மீ விரியும் திறனும் வேண்டும்.
உடல் எடை: வயதிற்கேற்ற சரிவிகித அளவு. +-10% ஏற்றுக்கொள்ளப்படும்.
செவித்திறன் : இயல்பான அளவு இருத்தல் வேண்டும்.
கண்பார்வை : கண்ணாடி அணியாதவர்கள் எனில் 6/24, கண்ணாடி அணிபவர்கள் எனில் 6/9 & 6/12 இருக்க வேண்டும்.
குறிப்பு : உடம்பில் எந்த பகுதியிலும் பச்சைக்குத்தி இருக்கக்கூடாது.

தேர்வு செய்யப்படும் முறைகள் :

மூன்று கட்ட தேர்வு முறைகள் உண்டு.
1. எழுத்து தேர்வு,
2. உடற்தகுதி மற்றும்
3. மருத்துவத் தகுதி தேர்வு

சம்பளம் :

தேர்வுகளில் வெற்றிபெற்று பணியில் சேரும் நபர்களுக்கு, தொடக்க ஊதியமாக ரூ.29,200 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகை ரூ.6,200 வழங்கப்படும்.

பதவி உயர்வு:

பிற்காலத்தில் பதவி உயர்வு அடைவோர், (Pradhan Sahayak Engineer) தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூ.47,600 ஊதியமாகக் கிடைக்கும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகை ரூ.6,200 வழங்கப்படும்.

மேலும் தெளிவான மற்றும் விரிவான தகவல்களுக்கு, https://joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/YANTRIK_220_ADVT.pdf- என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com