இந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு
நாட்டின் மிகப்பெரிய வங்களில் ஒன்றான இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய வேலைக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 417 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மணிபாலில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்படும். அதில் தேர்வாகும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இளங்கலை படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை
1 உங்களது பிரவுசரில் http://www.indianbank.in/ என்ற முகவரிக்கு செல்லவும்
2.அதில் Career என்ற பிரிவுக்கு செல்லவும்
3. அதில் PO for boarding section என்பதை கிளிக் செய்யவும்
4. அதில் உங்களது சில விபரங்களை பதிவு செய்து கொள்ளவும்
5.கேட்கப்படும் இதர தகவல்களை பதிவு செய்து , அதனை Save செய்யவும்
6.உங்களுக்கென Username, Password கொடுக்கப்படும், அதனை கொண்டு உள்நுழையவும்
7.சுய விபரங்கள், கலவித்தகுதி போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்
8.விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உங்களது பதிவெண்ணை பெற்றுக் கொள்ளலாம்
9.முழுமையான விண்ணப்பம் உடனடியாக உருவான பின்னர், அதனை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும்
விண்ணப்பக் கட்டணம்
ஓ.பி,சி - ரூ.600
எஸ்.சி,எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் - ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 27 கடைசி தேதி.