பட்டதாரிகளுக்கு முப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிய அரிய வாய்ப்பு

பட்டதாரிகளுக்கு முப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிய அரிய வாய்ப்பு
பட்டதாரிகளுக்கு முப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிய அரிய வாய்ப்பு

இந்திய ராணுவத்தின் கீழுள்ள முப்படைகளில் பயிற்சியுடன் கூடிய அதிகாரியாகப் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கம்பைண்டு டிஃபன்ஸ் சர்வீசஸ் (CDS-II) தேர்வை யுபிஎஸ்சி நடத்துகிறது. இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:

1. இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன் (ஆர்மி விங்) - 100
2. இந்தியன் நாவல் அகாடமி, எழிமலா (நாவல் விங்) - 45
3. ஏர் போஃர்ஸ் அகாடமி, ஹைதராபாத் (ஏர் விங்) - 32
4. ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி(112) - SSC ஆண்கள், சென்னை - 225
5. ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி(26) - SSC பெண்கள், சென்னை - 15

மொத்தம் = 417 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 12.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2019, மாலை 06.00 மணி வரை
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள்: 15.07.2019 முதல் 22.07.2019 மாலை 06.00 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதி: 08.09.2019

தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர் / ஆண்கள் - ரூ.200
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

வயது வரம்பு:
1. இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன் (ஆர்மி விங்)-இல் பயிற்சி பெறுவதற்கு 02.07.1996க்கு பின்னும் 01.07.2001க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

2. இந்தியன் நாவல் அகாடமி, எழிமலா (நாவல் விங்)-இல் பயிற்சி பெறுவதற்கு 02.07.1996க்கு பின்னும் 01.07.2001க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
3. ஏர் போஃர்ஸ் அகாடமி, ஹைதராபாத் (ஏர் விங்) -இல் பயிற்சி பெறுவதற்கு 02.07.1996க்கு பின்னும் 01.07.2001க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
4. ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி(112) - SSC ஆண்கள், சென்னை -இல் பயிற்சி பெறுவதற்கு 02.07.1995க்கு பின்னும் 01.07.2001க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
5. ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி(26) - SSC பெண்கள், சென்னை -இல் பயிற்சி பெறுவதற்கு 02.07.1995க்கு பின்னும் 01.07.2001க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

1. எழிமலாவில் உள்ள இந்தியன் நாவல் அகாடமியில் பயிற்சி பெறுவதற்கு, பி.எஸ்சி / பி.இ / பி.டெக் டிகிரி இன் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
2. ஹைதராபாத்தில் உள்ள ஏர் போஃர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறுவதற்கு, பி.இ / பி.டெக் டிகிரி இன் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
3. சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில் பயிற்சி பெறுவதற்கு, ஏதேனும் ஒரு டிகிரி படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://upsconline.nic.in/mainmenu2.php - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு முறை:
1. எழுத்து தேர்வு 
2. நேர்முகத்தேர்வு
3. உடற்தகுதி தேர்வு

மேலும் இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://upsc.gov.in/sites/default/files/Notice-CDSII19-engl-12062019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com