தற்போதே தொடங்கிய 1-8 வகுப்புகள்: விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்?

தற்போதே தொடங்கிய 1-8 வகுப்புகள்: விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்?

தற்போதே தொடங்கிய 1-8 வகுப்புகள்: விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்?
Published on
தமிழ்நாட்டில் அரசின் விதிகளை மீறி, தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேநேரத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னையில் சில தனியார் பள்ளிகள் தற்போதே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளிகளுக்கு வரவைப்பதாக புகார் எழுந்துள்ளது. கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நலச் சங்கத்தின் அருமைநாதன்.
மேலும், மாணவர் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்படுவதும் காரணம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். கொரோனா நெருக்கடியை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் பாடத்திட்டமே குறிக்கோள் என்று செயல்படாமல் குழந்தைகள் உடல் நலன் மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com